ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு ஆரம்பம்

16 Jul 2022

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாகி உள்ளது. படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தின் கதாநாயகன் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார்.

படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படப் புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர், திரில்லர் ஜானரில் தயாராகும் படம் இது.

Tags: chandramukhi 2, ragawa lawrence, p vasu, vadively, lyca productions

Share via: