விஜய் டிவியில் இரண்டு புத்தம் புதிய நிகழ்ச்சிகள்
16 Aug 2020
விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 என்ற இரண்டு புத்தம் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல்வேறு சீசன்களின் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவர்.
இதில் நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர்களான சங்கர் மகாதேவன், மனோ, சித்ரா, சுபா, உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா, நகுல், கல்பனா, எஸ்.பி.பி சரண் மற்றும் பலர் பங்குபெறுவர்.
இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகிறார்கள்.
ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 நிகழ்ச்சியில் இரண்டு டீம்கள் இடம்பெறும். பிரபலங்கள் இதன் போட்டியாளர்களாக பங்குபெறுவர் .
இந்நிகழ்ச்சியில் இசை மற்றும் பாடல்களுடன் தொடர்புடைய நான்கு சுற்றுகள் இருக்கும். நான்கு சுற்றுகளின் முடிவில், வென்ற அணி ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துச் செல்ல முடியும்.
இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்குகிறார்.
Tags: vijay tv, vijay tv new shows