விஜய்க்கு நாயகியாக ஜான்வி கபூர்?

17 Jun 2024

விஜய்க்கு நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’கோட்’ படத்துக்குப் பிறகு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கவுள்ளார் விஜய். இது அவருடைய நடிப்பில் உருவாகும் கடைசி படமாகும். இந்தப் படத்துக்குப் பிறகு முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளார்.

ஹெச்.வினோத் – விஜய் இணையும் படத்தினை கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது முழுமையாக திரைக்கதை எழுதும் பணிகளை முடித்துவிட்டார் ஹெச்.வினோத். விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக ஜான்வி கபூர் நடிப்பார் என தெரிகிறது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ‘தேவாரா’ படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். தமிழில் அதே போல் ஒரு முன்னணி நடிகரின் படத்தின் மூலம் அறிமுகமாக முடிவு செய்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் 3 படங்களை இயக்கியுள்ளார் ஹெச்.வினோத். ஆகையால் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கிறது. இதனால் விஜய் நடிப்பில் ஜான்வி கபூர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது.

Tags: vijay, jhanvi kapoor

Share via: