சசிகுமார் இயக்கத்தில் சூரி?

17 Jun 2024

சசிகுமார் இயக்கத்தில் சூரி நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதனால் பலரும் சூரியை நாயகனாக வைத்து படம் தயாரிக்க அணுகி வருகிறார்.

இதனிடையே, ‘கருடன்’ படத்தில் சூரிக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார் சசிகுமார். தற்போது இந்தப் படத்தின் வெற்றியால், சசிகுமார் சூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். என்னவென்றால், தான் ஒரு நாயகனாக இருந்தாலும், உனக்காக இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். தற்போது மீண்டும் இயக்குநராக படம் இயக்கவுள்ளேன். அதில் நீ நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் சசிகுமார்.

சசிகுமாரின் இந்தப் பேச்சினை தட்ட முடியாமல், சூரியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதற்காக சூரிக்கு ஏற்ற வகையில் கதையொன்றை தயார் செய்து வருகிறார் சசிகுமார். விரைவில் சசிகுமார் இயக்கத்தில் சூரியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

தற்போது ‘விடுதலை 2’ முடித்தவுடன், வெற்றிமாறன், ‘கருடன்’ தயாரிப்பாளர், ‘மாவீரன்’ தயாரிப்பாளர் ஆகியோரது தயாரிப்பில் நடிக்கவுள்ளார் சூரி. இதன் இயக்குநர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Tags: sasikumar, soori

Share via: