விஜய், தோனி சந்திப்பு, டிவிட்டரில் நடந்த ரசிகர்கள் சண்டை
12 Aug 2021
சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனி சந்தித்துக் கொண்டார்கள்.
அந்த ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு விளம்பரப் படப்பிடிப்புக்கு தோனி வந்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்தது
இருவரது சந்திப்பு பற்றிய தகவலும், புகைப்படங்களும் வெளிவந்த பின் அது டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
விஜய்யை தளபதி என்று அவருடைய ரசிகர்களும், தோனியை தல என அவருடைய ரசிகர்களும் அழைப்பது வழக்கம். ஆனால், தமிழ் சினிமாவில் அஜித்தும் ‘தல’ என்றே அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.
இருப்பினும், இன்றைய விஜய், தோனி சந்திப்பை டிவிட்டரில் அவர்களது ரசிகர்கள் #ThalaThalapathy என்ற ஹேஷ்டேக்கில் டிரென்டிங் செய்ய ஆரம்பித்தனர்.
தோனியை ‘தல’ எனக் குறிப்பிட்டு ரசிகர்கள் இன்று டிரென்ட் செய்ததது அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்தது. அவர்கள் பதிலுக்கு ‘ஒரே தல அஜித்’ என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்தனர்.
மதியம் ஆரம்பமான இந்த சண்டை இரவு வரை நீடித்து வருகிறது.
எது, எதற்குத்தான் டிவிட்டரில் சண்டை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது.
Tags: vijay, dhoni, ms dhoni, thalapathy, thalapathy vijay, thala dhoni, thala
