நட்டி ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்
12 Aug 2021
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நட்டி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
Tags: natraj subramaniam, shilpa manjunath
