‘விடுதலை 2’ ரிலீஸ் தெரியாது: வெற்றிமாறன் ஷாக் பதில்

12 Apr 2024

‘விடுதலை 2’ எப்போது ரிலீஸ் என தெரியாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. எல்ரெட் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டும் பாக்கி இருக்கிறது. எப்போதுமே ஒரு படத்துக்கு அதிக காலங்கள் எடுத்துக் கொள்பவர் வெற்றிமாறன். 8 கோடி முதலீட்டில் எடுக்கப்பட இருந்த ‘விடுதலை’ படம், 2 பாகங்களாக மாறி தற்போது சுமார் 100 கோடி பட்ஜெட் வரை சென்றுவிட்டது.

இதனிடையே, விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் வெற்றிமாறன். அப்போது அவரிடம் ”‘வடசென்னை 2’ எப்போது”  என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் எழுப்பினார். அதற்கு வெற்றிமாறன் கூறியதாவது”

”‘விடுதலை 2’ எப்போது ரிலீஸ் என்றே தெரியாமல் இருக்கும் ஆள் நான். அதுவும் முடிந்த படம் வேறு, அதுவே எப்போது வெளியீடு என்று தெரியாது. அதை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ இருக்கிறது. அதற்குப் பிறகு என்ன பண்ணப் போகிறேன் என தெரியவில்லை. ’வடசென்னை 2’ கொஞ்ச காலங்கள் ஆகும்”

இவ்வாறு வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

வெற்றிமாறனின் இந்தப் பதில் மேடைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் இந்தப் பதில் முதலீடு போட்ட தயாரிப்பாளருக்கு என்னவாக இருக்கும் என்பதை வெற்றிமாறன் புரிந்துக் கொள்ள வேண்டும்.

Tags: vetrimaaran, soori, vijay sethupathi

Share via: