காதலை ஒப்புக் கொண்ட ஜான்வி கபூர்

12 Apr 2024

தான் காதலித்து வருவதை ஒப்புக் கொண்டுள்ளார் ஜான்வி கபூர்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். மறைந்த ஸ்ரீதேவியின் மகள் இவர். தற்போது தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ‘தேவாரா’ மற்றும் ராம்சரண் நடிக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இன்னும் எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

தனது அப்பா போனி கபூர் மற்றும் சிகர் பஹாரியா ஆகியோருடன் தான் எப்போதும் வெளியே செல்வார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் தான் சிகர் பஹாரியா என்பது நினைவுக் கூரத்தக்கது. ஜான்வி கபூர் – சிகர் பஹாரியா இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள், இருவரும் காதலிக்கிறார்கள் என பல்வேறு தகவல்கள் இந்தி ஊடகத்தில் வெளியான வண்ணம் இருந்தன. இது தொடர்பாக ஜான்வி கபூர் எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

இதனிடையே போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘மைதான்’ படத்தின் ப்ரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றது. அதில் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் கலந்துக் கொண்டார் ஜான்வி கபூர். அப்போது ‘சிக்கு’ என்ற பெயர் பொரித்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார்.  சிகர் பஹாரியாவை தான் சிக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இது குறித்து கேட்டதற்கு, சிகர் பஹாரியாவை காதலிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார் ஜான்வி கபூர்.

Tags: jhanvi kapoor

Share via: