இறுதிகட்டப் படப்பிடிப்பில் ‘விடாமுயற்சி’

31 Jul 2024

ஹைதராபாத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களைத் தாண்டி நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இதன் 90% காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். அங்கு படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கவுள்ளனர்.

இந்தச் சண்டைக்காட்சிக்காக அஜித் உடலமைப்பை சிறிதளவு மாற்றியிருக்கிறார். மேலும் இதில் சட்டையில்லாமல் தோன்றவுள்ளார். இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டவுள்ளது படக்குழு.

ஹாலிவுட் படமான ‘தி ப்ரேக்டவுன்’ தமிழ் ரீமேக் தான் ‘விடாமுயற்சி’ என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

Tags: vidamuyarchi, ajith kumar

Share via: