வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் “கஸ்டடி”

23 Nov 2022

வெங்கட்பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்து வரக்கூடியத் திரைப்படத்திற்கு கஸ்டடி என்று டைட்டில் வைத்துள்ளனர்.

நாக சைதன்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக ப்ரீ லுக்குடன், படத்தின் டைட்டிலை முதல் பார்வையுடன் தற்போது வெளியிட்டுள்ளனர். 
வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் 'கஸ்டடி' என படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா சிவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரகிறது இந்த பைலங்குவல் படம். மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க, பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.
 

Tags: vengat prabhu naga chaithanya, custody,

Share via: