சன் டிவியில் இன்று மதியம் 3 மணிக்கு ‘வெள்ளை யானை’
11 Jul 2021
மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்க, சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வெள்ளை யானை’.
இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இன்று மதியம் 3 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகள் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கும் படம் இது. இதற்கு முனபு வெளிவந்த சில படங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளை மேலோட்டமாக மட்டுமே தொட்டிருப்பார்கள்.
ஆனால், இந்தப் படத்தில் அதை மிகவும் உணர்வுபூர்வமாக அலசியிருக்கிறார் இயக்குனர் சுப்பிரமணிய சிவா.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை இப்படத்திற்கு நல்லதொரு பக்க பலமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் screen4screen.com எடிட்டிர் வெற்றிவேல் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
Tags: vellai yaanai, Samuthirakani, Subramaniam Shiva, Yogibabu, Santhosh Narayanan, Athmiya