வெள்ளை யானை - சன் டிவியில் நேரடி ரிலீஸ்

04 Jul 2021

மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் குமார் தயாரிப்பில், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘வெள்ளை யானை’.

இப்படம் வரும் ஜுலை 11ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, மதியம் 3 மணிக்கு சன் டிவியில் திரைக்கு வருவதற்கு முன்பே ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த வருடம் கொரானோ தாக்கத்தின் முதல் அலை வந்த போது சில படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகின, சில படங்கள் டிவியில் நேரடியாக வெளியாகின.

அந்த வரிசையில் ‘வெள்ளை யானை’ படம் சன் டிவியில் வெளியாக உள்ளது.

விவசாயம் பொய்த்துப் போன ஒரு பூமியில், பிழைப்பைத் தேடி வெளி மாநிலத்திற்குச் செல்லும் சில விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டம்தான் இந்த ‘வெள்ளை யானை’ படத்தின் கதை.

Tags: vellai yaanai, Samuthirakani, Subramaniam Shiva, Yogibabu, Santhosh Narayanan, Athmiya

Share via: