ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய் நடிக்கும் 66வது படத்தின் தலைப்பு ‘வாரிசு’ என இன்று அறிவிக்கப்பட்டது.

நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டருன் இதை அறிவித்துள்ளார்கள்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், சங்கீதா, சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் ‘வாரசுடு’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கில் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.