ஆறு வித தோற்றங்களில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’

13 Aug 2021

‘வானம், பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். 

அரவிந்தசாமி, ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, சிம்ரன், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டீசர் சில தினங்களுக்க முன்பு வெளியானது.  டீசரில் அரவிந்தசாமியா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இளமையுடன் விதவித  கெட்டப்புகளில் கவனம் ஈர்த்துள்ளார். 

பல வெற்றிப் படங்களை இயக்கிய செல்வா இப்படத்தை இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறுகையில்,

“இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார், அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன். அரவிந்தசாமியின் படங்களில் இது  முக்கிய படமாக இருக்கும்,” என்கிறார். 

 

Tags: aravind swamy, vanangamudi, ritika singh, simran, selva, nandita, chandini

Share via: