ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது ‘வணங்கான்’
18 Jun 2024
பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. முதலில் சூர்யா நடிப்பில் தொடங்கப்பட்ட இந்தப் படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்க இயக்கியுள்ளார் பாலா. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இதில் ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது ஆகஸ்ட் 15-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாகாது என்று உறுதியாகிவிட்டது. இதனால் அந்த தேதியில் ‘வணங்கான்’ படத்தினை வெளியிட சுரேஷ் காமாட்சி முடிவு செய்திருக்கிறார். இதற்கு ஏற்ற வகையில் இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்த கூறியிருக்கிறார்.
Tags: vangaan, bala, arun vijay