‘புஷ்பா 2’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

18 Jun 2024

’புஷ்பா 2’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியினை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், சுனில், ராஷ்மிகா மந்தனா, அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. ‘புஷ்பா’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

‘புஷ்பா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், ‘புஷ்பா 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. முதலில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்துக் கொண்டே இருக்கிறது.

இதனால், ‘புஷ்பா 2’ வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை முன்வைத்து பல படங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீட்டு தயாராகி வந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக டிசம்பர் 6-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த தேதி மாற்றத்தினால், பலரும் நிம்மதியடைந்துள்ளனர். ஏனென்றால், முதலில் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது. டிசம்பர் 20-ம் தேதி வெளியீடு என்று பல படங்கள் விளம்பரப்படுத்தி வந்தது. எந்தவொரு படக்குழுவினருக்கும் பிரச்சினையில்லாமல் டிசம்பர் 6-ம் தேதியினை தேர்வு செய்துள்ளது படக்குழு.

Tags: pushpa 2

Share via:

Movies Released On July 15