ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் வழங்க, வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’.

இப்படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை போஸ்டர் நேற்று மாலை வெளியானது. நீண்ட நாட்களாகவே ‘வலிமை அப்டேட்’ வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது படக்குழு.

அஜித்தின் அட்டகாசமான தோற்றத்தில் வெளியான போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சோனி மியூசிக் சௌத், ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ புராஜக்ட்ஸ் என மூன்று யு டியூப் தளங்களில் இந்த மோஷன் போஸ்டர் வீடியோவை வெளியிட்டார்கள்.

இருந்தாலும் சோனி மியூசிக் சௌத் தளத்தில்தான் ரசிகர்கள் அதிகமாகப் பார்வையிடுகிறார்கள். அந்த ஒரு தளத்தில் மட்டும் 54 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் தளத்தில் 21 லட்சம் மற்றும் பேவியூ புராஜக்ட்ஸ் தளத்தில் 11 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது இந்த மோஷன் போஸ்டர்.

மூன்று தளங்களிலும் சேர்த்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம்  இந்திய அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையை ‘வலிமை’ படைத்துள்ளது. இந்த சாதனையை 24 மணி நேரத்திற்குள் படைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று

ஒரே யு டியூப் தளத்தில் வெளியிட்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும். எதற்காக மூன்று யு டியூப் தளங்களில் இதை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை.