யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ - தமிழக வினியோ உரிமை விவரம்

26 Feb 2026

யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமை கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய்க்கு முன்பணமாக விற்கப்பட்டுள்ளது. 

இது சமீபகால தமிழ் சினிமா வணிகத்தில் மிக முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் வலுவான வெளியீட்டை உறுதி செய்ய, சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். மதுரை- ராமநாதபுரம்- திருச்சி- தஞ்சாவூர் -சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார்.

இது சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் பரவலான திரையிடலை உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து உற்சாகம் தெரிவித்து, யாஷின் பான் இந்திய அளவிலான எதிர்பார்ப்பு மற்றும் தமிழக ரசிகர்களின் ஆதரவை சுட்டிக்காட்டினர்.

'கேஜிஎஃப்: பார்ட் 2' வெற்றி மற்றும் யாஷின் புகழே இந்த பெரிய ஒப்பந்தத்திற்கு காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். 

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிய இப்படம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Tags: yash, toxic, nayanthara

Share via: