ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் 'தீங்கிரை'

20 Dec 2020

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. 

அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த், வெற்றி இருவரும் நாயகர்களாக நடிக்க நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார்.

சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே, இந்த ‘தீங்கிரை’. 

சைக்கோ கிரைம் திரில்லர் வகையிலான கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறதாம். 
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிகுந்த பொருட்செலவில் படமாக இருக்கிறது.

பிரகாஷ் நிக்கி இசையமைக்க, கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். நிர்வாக தயாரிப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பிரவீன் மற்றும் ப்ரோடக்ஷன் கண்ட்ரோல் கே.எஸ். ஷங்கர். 

Tags: theengirai

Share via: