தமிழில் ரீமேக் ஆகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’
04 Mar 2021
மலையாளத்தில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் கண்ணன். ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நட்சத்திரத் தேர்வு நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, சவரிமுத்து, ஜீவிதா சுரேஷ்குமார் வசனம் எழுதுகிறார்கள்.
மசாலா பிக்ஸ் மற்றும் எம்கேஆர்பி நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.
Tags: aishwarya rajesh, kannan, the great indian kitchen