தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வரும் ‘தள்ளிப் போகாதே’
08 Oct 2021
கண்ணன் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையமைப்பில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தள்ளிப்போகாதே’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ”. உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
நிகழ்ச்சியில் இயக்குநர் கண்ணன் பேசுகையில்,
‘ஜெயம்கொண்டான்’ படத்தில் ஆரம்பித்த பயணம் 10 படங்கள் வரை வந்துள்ளது. அதற்கு முழுக்காரணம் தயாரிப்பாளர் தியாகராஜன் சார் தான். இந்தப்படத்தில் எனக்கு ‘கண்டேன் காதலை’ படத்தில் எப்படி ஒரு பாராட்டு கிடைத்ததோ அதே போல் இப்படத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். அதர்வா தான் இந்தப்படத்தை முதலில் என்னிடம் அறிமுகம் செய்தார். பின் முறையாக அனுமதி வாங்கி செய்துள்ளோம். இந்தப்படம் எந்த இடத்திலும் ஒரு முகச்சுளிப்பு இல்லாமல், பார்க்க முடிகிற படமாக இருக்கும். இந்தப் படத்திற்கு ராம் பிரசாத் மிக ஆதரவாக இருந்தார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு இந்தப் படம் உருவாக மிக உதவி செய்துள்ளார். கபிலனுடன் தள்ளிப் போகதேவுக்கு பிறகு தொடர்ந்து பயணித்து வருகிறேன். மிக அற்புதமான எழுத்தாளர். அமிதாஷ் மிக அற்புதமாகச் செய்துள்ளார். அவர் சரியாகச் செய்தால் தான் இந்தப்படம் எடுபடும், அதை உணர்ந்து செய்துள்ளார். இந்தப்படம் நன்றாக வர மிக முக்கிய காரணம் அதர்வா மற்றும் அனுபமா தான். இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். ‘தள்ளிப் போகாதே’ வரும் 14 ந்தேதி வெளியாக உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்கு,”.
நடிகத் அதர்வா பேசுகையில்,
“2 வருஷம் கழிச்சு எனக்கு நடக்கும் முதல் ப்ரஸ் மீட் இது. இந்த 2 வருடத்தில் நிறைய விசயங்களைக் கடந்து வந்துள்ளோம். இப்போது எல்லோரும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. நானும் கண்ணன் சாரும் ஒரு காதல் படம் செய்யலாம் என பேசிய போது, இந்தப்படம் எங்கள் பேச்சில் வந்தது. அந்தக் கதையை தமிழுக்கு மாற்ற, கபிலனைத் தவிர வேறு யாருமே எங்கள் மனதில் வரவில்லை. நாங்கள் நினைத்தது போல் தமிழில் மிக அழகாக மாற்றித் தந்தார், அவருக்கு நன்றி. இந்த படத்திற்கு எங்கள் முதல் சாய்ஸாக அனுபமா தான் இருந்தார். அமிதாஷ் பாத்திரத்திற்கு நிறைய பேரைப் பார்த்தோம், கடைசியாகத் தான் அவர் வந்தார், அற்புதமாக நடித்துள்ளார். கண்ணன் வேலை செய்யும் வேகம் பற்றி நிறைய பேர் சொல்லி விட்டார்கள். இந்த படத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்கு தாடி வளர்க்க வேண்டும் நான் தாடி வளர்த்த மூன்று வாரங்களில் வேறு ஒரு படத்தையே முடித்துவிட்டு வந்துவிட்டார். அவ்வளவு வேகமாக வேலை செய்யக்கூடியவர். அனுபமா அற்புதமான நடிகை, இதில் அவரை எல்லாருக்கும் பிடிக்கும். தியாகராஜன் சார் தான் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் இங்கு வந்து என்னை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
Tags: thalli pogathey, atharva, kannan, gopi sundar, anupama parameswaran