சினிமா கதாநாயகர்களை பட்டப் பெயர்களை வைத்து அழைப்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித்குமார் என பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கும் பட்டப் பெயர்கள் உண்டு.

தமிழ் சினிமாவில் தனது ரசிகர் மன்றங்களை எப்போதோ கலைத்து பலருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் அஜித்குமார். 

இப்போது தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார், மற்றும் அஜித் என்றோ எல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.