‘த்ருஷ்யம் 2’ மூலம் ரீஎன்ட்ரி ஆன சுஜா வருணி

01 Dec 2021

வெங்கடேஷ் , மீனா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள தெலுங்குப் படம் ‘த்ருஷ்யம் 2’.

இப்படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சுஜா வருணி.  

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சுஜா. 

திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். 

இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்கத் தயாராகி இருக்கிறார். 

'த்ருஷ்யம் 2' படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் நடிக்கத் தயாராக உள்ளார்.

Tags: suja varuni, drushyam 2

Share via: