சூர்யா 44’ படப்பிடிப்பு பணியின் திட்டங்கள்
24 Jun 2024
‘சூர்யா 44’ படத்தினை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜுலை முதல் வாரம் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் என தொடர்ச்சியாக படப்பிடிப்புக்கு திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. செப்டம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி அன்று படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளார்கள். ஒருபுறம் படப்பிடிப்பு நடைபெறும் போதே, அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.
‘கங்குவா’ எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருக்கிறது. அதற்குள் இந்தப் படத்தினை முடித்து, இதன் டீஸரை ‘கங்குவா’ படத்தோடு இணைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு
Tags: suriya 44, suriya , karthik subburaj