ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

04 Mar 2021

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிப்பில் மணிபாரதி இயக்கத்தில் தாஜ்நூர் இசையமைப்பில், ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே நாயகன் நாயகியாக நடிக்கும் புதிய படம் ஆரம்பமாகி உள்ளது.

இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கோகுல் ஒளிப்பதிவை கவனிக்க, எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஊட்டியில் பூஜையுடன் ஆரம்பமானது.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளார்கள்.

Tags: srushti dange, srikkanth, mani bharathi, tajnoor

Share via: