ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு நிறைவு

24 Sep 2022

இந்தியத் திரைப்படங்களை பல வெளிநாடுகளில் விநியோகம் செய்து வரும் முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. 

டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 'லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைக்க, அஜ்மல்  பாடல்களுக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. 

விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளது.

Tags: soppana sundari, sg charles, aishwarya rajesh

Share via: