‘சிறை’ டிரைலரை வெளியிட்ட தனுஷ்

12 Dec 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிக்க, அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் இன்று வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
.
கோவை GRD கல்லூரியில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்து கொள்ள,ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. பெரும் ஆராவாரத்தோடு படக்குழுவை உற்சாகப்படுத்திய மாணவர்கள், டிரைலரைப் பாராட்டி வாழ்த்தினர்.

‘டாணாக்காரன்’  இயக்குநர் தமிழ், சந்தித்த உண்மை அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

Tags: sirai, vikram prabhu, lk akshaykumar

Share via: