சாந்தனு, அஞ்சலி நாயகர் நடிக்கும் ‘மெஜந்தா’
13 Dec 2025
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜெ பி லீலாராம், ராஜு க, சரவணன் பா, மற்றும் ரேகா லீலாராம், ஆகியோர் இணைந்து தயாரிக்க, பரத் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’மெஜந்தா’.
இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை;f கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எளிய பூஜையுடன் ‘மெஜந்தா’ படக்குழு படப்பிடிப்பை தொடங்கியது. தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அடர்த்தியான மெஜந்தா வண்ணம் படத்தின் மையக்கருவான ‘மனதின் வண்ணங்களில் இருந்து பிறந்த காதல்’ என்பதை பிரதிபலிக்கிறது. உளவியல் காதல் கதையாக உருவாகியுள்ள கதையாக ‘மெஜந்தா’ உருவாகியுள்ளது.
இரண்டு மனங்களின் வெவ்வேறு பக்கங்களை இந்தக் கதை நுணுக்கமாக ஆய்வு செய்கிறது. இந்தக் கதையின் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான தருணங்களை உணர்ந்து நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சென்னை, கோத்தகிரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 2026ல் இப்படம் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஷரத் ரவி, சௌந்தர்யா சரவணன், படவா கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை: தரண் குமார்,
ஒளிப்பதிவு: பல்லு,
படத்தொகுப்பு: பவித்ரன்,
கலை இயக்குநர்: பிரேம்,
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்,
ஆக்ஷன் வடிவமைப்பு: சக்தி சரவணன்.
Tags: magenta, shanthanu, anjali nair

