டிசம்பர் 25 வெளியாகும் ‘சிறை’

10 Oct 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோசார்பில், லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'டாணாக்காரன்'  இயக்குநர் தமிழ், உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை  இயக்கியுள்ளார்.

ஒரு காவலருக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் சேட்டிலைட், ஒடிடி உரிமைகளை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளது.

இப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக முடிந்து  இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர்  இசை மற்றும் டிரைலர் பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. 

Tags: sirai, vikram prabhu, lk akshay kumar

Share via: