‘டைனோசர்ஸ்’ இயக்குநரின் இயக்கத்தில் சிம்பு
26 May 2024
’டைனோசர்ஸ்’ இயக்குநர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி வெளியான படம் ‘டைனோசர்ஸ்’. விமர்சன ரீதியாக இந்தப் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. படத்தின் வித்தியாசமான காட்சியமைப்புகள் பல முக்கியமான நடிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பினை வைத்து, ‘டைனோசர்ஸ்’ இயக்குநர் எம்.ஆர்.மாதவனின் அடுத்த படத்தினை தயாரிக்க முன்வந்து அட்வான்ஸ் தொகையும் வழங்கினார். இதனிடையே, இந்தப் படத்தின் நடிகர்கள் யார், எப்போது தொடங்கும் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது.
தற்போது, சில தினங்களுக்கு முன்பு சிம்புவை சந்தித்து கதையொன்றை கூறி இருக்கிறார் எம்.ஆர்.மாதவன். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இயக்குநரை வெகுவாக பாராட்டிவிட்டு, எந்தவொரு மாற்றமும் வேண்டாம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டார். இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் எம்.ஆர்.மாதவன்.
விரைவில் யார் தயாரிப்பு என்பதை மட்டும் முடிவு செய்துவிட்டு, முதற்கட்ட பணிகளைத் தொடங்கிவிட திட்டமிட்டுள்ளார் எம்.ஆர்.மாதவன்.
Tags: silambarasan, dinasaurs