லாரன்ஸ் – ரத்னகுமார் விலகல் ஏன்?
26 May 2024
லாரன்ஸ் – ரத்னகுமார் கூட்டணி பிரிவிற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
’ஆடை’ இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க படமொன்று தயாராக இருந்தது. இதனை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருந்தார். இந்தப் படம் தான் இப்போது ‘பென்ஸ்’ என்ற பெயரில் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். நீண்ட நாட்களாகவே லாரன்ஸ் – ரத்னகுமார் கூட்டணி குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்தக் கூட்டணி பிரிவிற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் எழுதிய கதையைத் தான் ரத்னகுமார் இயக்குவதாக இருந்தது. இசை வெளியீட்டு விழா ஒன்றில் ரஜினி பேசிய கழுகு – காக்கா கதை தான் இதற்கு முக்கியமான காரணம். இதனை விமர்சிக்கும் வகையில் ரத்னகுமார் ட்வீட் ஒன்றினை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.
தீவிர ரஜினி ரசிகர் லாரன்ஸ், தீவிர விஜய் ரசிகர் ரத்னகுமார் என இருவருக்குள்ளும் உரசல்கள் உண்டாகின. இதனை சரி செய்ய லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக்கினார். இறுதியான கதையை லாரன்ஸை சந்தித்து லோகேஷ் கனகராஜே தெரிவித்தார். திரைக்கதையை வடிவத்தை மட்டும் ரத்னகுமார் சொல்ல சொன்னார்.
லாரன்ஸ் – ரத்னகுமார் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது ரத்னகுமார் சொன்ன திரைக்கதை வடிவம், லாரன்ஸுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். கதையாக நன்றாக உள்ளது, ஆனால் திரைக்கதையில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று கூறி ரத்னகுமாரை அனுப்பிவிட்டார்.
விஜய் ரசிகர் என்பதால் லாரன்ஸ் இப்படி செய்துவிட்டார் என்று ரத்னகுமார் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். இதற்குப் பின்பு லாரன்ஸ் – ரத்ன்குமார் கூட்டணியை இணைக்க லோகேஷ் கனகராஜ் எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.
இறுதியாக பாக்யராஜ் கண்ணனை இயக்குநராக்கி, லாரன்ஸ் படத்தினை அறிவித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
Tags: ratna kumar, raghava lawrence