செப்டம்பர் 12ல் 10 படங்கள் ரிலீஸ்
07 Sep 2025
2025ம் ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 180ஐத் தொட்டுவிட்டது. வரும் வாரம் செப்டம்பர் 12ம் தேதி மட்டும் 10 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், இந்த மாதத்திற்குள் இந்த வருடத்தின் வெளியீட்டுப் பட்டியலில் 200 படங்கள் சேர்ந்துவிடும்.
செப்டம்பர் 12ம் தேதியன்று, “அந்த 7 நாட்கள், பாம், பிளாக்மெயில், தாவுத், காயல், குமார சம்பவம், மதுரை 16, தணல், உருட்டு உருட்டு, யோலோ” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு இந்த வருடத்தில் ஜுலை 18ம் தேதி 10 படங்களும், பிப்ரவரி 14ம் தேதி 9 படங்களும், மார்ச் 14ம் தேதி 9 படங்களும், மே 9ம் தேதி 9 படங்களும், ஆகஸ்ட் 8ம் தேதி 9 படங்களும் ஒரே நாளில் வெளியாகி உள்ளன.
இப்போது செப்டம்பர் 12ம் தேதி மீண்டும் 10 படங்கள் வெளியாக உள்ளன. ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளிவருவதால் தியேட்டர்களும் கிடைப்பதில்லை, அவற்றை அடுத்தடுத்து பார்க்க ரசிகர்களும் விரும்புவதில்லை.
Tags: september 12
