சங்கத்தலைவன், பிரமிப்பான ஒரு படம் - சமுத்திரக்கனி
25 Feb 2021
உதய் புரடெக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வெளியிடும் படம் ‘சங்கத்தலைவன்’
மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனு லட்சுமி, மாரிமுத்து மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை பிப்ரவரி 26ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகச்சியில் நடிகர் கருணாஸ் பேசுகையில்,
“வாய்ப்பளித்த மணிமாறன் அவர்களுக்கு நன்றி. இப்படியான படத்தை தயாரித்த வெற்றிக்கும் நன்றி. அசுரனில் என் மகனுக்கு வெற்றிமாறன் மூலமாக எப்படி ஒரு பெயர் கிடைத்ததோ, அதேபோல் எனக்கு இந்தப்படம் மூலமாக ஒரு வாய்ப்பை வெற்றிமாறன் தயாரிப்பில் கொடுத்திருக்கிறார். நாவல் எழுதிய பாரதிநாதன் சாருக்கும் நன்றி. பொல்லாதவன் படத்தில் இருந்தே வெற்றிமாறனைப் பார்த்து வருகிறேன். அதேபோல் வெற்றிமாறனும் மணிமாறனும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இரண்டு பேரும் சண்டை போடுவார்கள். ஆனாலும் நட்பைப் பேணி வருகிறார்கள். இப்படியான நண்பர்களோடு இணைந்து வேலை செய்தது பெருமையாக இருக்கிறது. படத்தில் என் மாப்பிள்ளை சமுத்திரக்கனி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி," என்றார்
வெற்றிமாறன் பேசியதாவது.
"சங்கத்தலைவன் படம் ஒரு பெட்டரான படம். இந்த மாதிரியான கதையைப் படம் பண்ணுவது என்பது இங்கு பெரிய சாதனையான விசயம். இந்தப்படத்தை எடுக்க வேண்டும் என்று கருணாஸ், உதயா வலியுறுத்தினார்கள். இந்தப்படத்திற்கு சமுத்திரக்கனி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அவரும் வந்தார். இந்தப்படத்திற்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.
இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கான டென்சனை இப்போதுதான் சந்திக்கிறேன். எனக்கு தியேட்டர்களில் நேரடியாக படத்தை வெளியிட்ட அனுபவம் கிடையாது. அதனால், இந்தப்படம் வெளியாக தாணு சார் தான் நிறைய உதவிகளைச் செய்து வருகிறார். இந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,
"சங்கத்தலைவன்’படத்தை நானும் இப்போது தான் பார்த்தேன், பிரமிப்பாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக நிறைய உழைச்சிருக்கோம். இந்தக் கதையை நாவலாக எழுதியிருந்த பாரதிநாதன் அவர்களுக்கும், அழகாக எடுத்திருந்த மணிமாறன் அவர்களுக்கும், படத்தைத் தயாரித்த எங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். இறைவன் கொடுத்த பரிசாகத்தான் இந்தப் படத்தைப் பார்க்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி," என்றார்.
இயக்குநர் மணிமாறன் பேசியதாவது,
"இந்தக்கதையை ரொம்ப சாதாரணமா சொல்லிடலாம். ஆனால் சில கன்டென்ட்கள் புரியாது. வெற்றிமாறன் சாருக்கு தயாரிப்பாளரா இந்தப் படம் மீது ஒரு பயம் இருந்திருக்கும். இப்போது கூட இருக்கும். ஏன் என்றால் படத்தில் பேசி இருக்கும் விசயங்கள் அப்படியானது. அனைவருக்கும் நன்றி," என்றார்
Tags: samuthirakani, karunas, ramya, sunulakshmi, manimaran, sangathalaivan