• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home News

மீண்டும் நடிக்கத் தயார் - நடிகை இஷா தியோல்

news
FEB-24-2021

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது.

குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக் தொழில்நுட்பமும் அவர்களது கைலான் சருமம் மற்றும் கூந்தலுக்கான தயாரிப்புகளும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. லேட்டஸ்டாக நடிகை ஈஷா தியோல் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை குறைத்துள்ளார். 

பாலிவுட் சீனியர்  நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில்நுட்பம் குறித்தும் மற்றும் அதன் கைலான் தயாரிப்புகள் பயன்பாடு குறித்தும் அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பலன்கள் குறித்தும் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேசும்போது,

“அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இருப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல, எனக்கும் உடல் எடை அதிகரிக்கவே செய்தது.. எனது நண்பர்கள் வட்டாரத்தில் கிரையோமேடிக், தொழில்நுட்பத்தில் எடை குறைப்பது குறித்து விசாரித்தபோது தான், இங்கே கலர்ஸ் நிறுவனம் குறித்து தெரியவந்தது. அதன்பிறகுதான் இந்த சிகிச்சை முறைக்குள் அடி எடுத்து வைத்தேன். அது மிகப்பெரிய பலனை தந்ததுடன் நல்ல அனுபவமாகவும் இருந்தது. எடை குறைவது கண்கூடாகவே தெரிந்தது.

அதேபோலத்தான் படப்பிடிப்பு, மேடை நிகழ்ச்சிகள், வெளியூர் பயணங்கள் என சுற்றிக்கொண்டே இருக்கும்போது, எனது சருமத்தை பராமரிப்பதும் கூந்தல் உதிர்வதை தவிர்ப்பதும் பெரிய சவாலாக இருந்தது. அப்போதுதான் கைலான் தயாரிப்புகள் பற்றி தெரியவந்தது. அவற்றில் நமக்கு தேவையான இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, ரசாயன பொருட்களோ அல்லது விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களோ அதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எனக்கு அவற்றை பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்தது” என்றார்.

மேலும் பத்திரியாக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஈஷா தியோல், 

“சென்னை எப்போதுமே என் சொந்த ஊர். நான் சிறுவயதில் விடுமுறைக்காக இங்கேயே என் தாத்தா அப்பாடி வீட்டில் வந்து தங்கி செல்வதைப்போல, இப்போது எனது குழந்தைகளையும் விடுமுறை என்றால் சென்னைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சென்னை வந்தாலே நல்ல ‘ரசம்’சாப்பிடுவதற்கு கிடைக்கிறது. ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்துள்ளேன். அதுபோன்று நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.. 

குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை. அதேசமயம் நல்ல படங்கள் என நண்பர்கள் மூலமாக தெரிய வரும்போது, அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.. நான் சூர்யாவின் ரசிகையும் கூட. அதேபோல தென்னிந்திய நடிகைகளில் தமன்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

திருமணம் ஆகி விட்டாலே, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. அந்தக் காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது, திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஓடிடி தளங்கள் வேறு உருவாகி விட்டன. நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கு தடை இல்லை,” என்றார் ஈஷா தியோல்.

ஈஷா தியோலின் தாயார் ஹேமமாலினி, தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக கோலோச்சியவர். அவரது சுயசரிதையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என ஈஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “என்னுடைய அம்மாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும். என் அம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் வெளியாகி இருக்கிறது, படித்தேன், அது நன்றாக இருக்கிறது. அதேபோல யார் அதை படமாக எடுக்கப் போகிறார்கள், எப்படி எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்து தான், அதில் நடிக்க முடியுமா என தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக எனது அம்மாவின் அனுமதி இருந்தால் மட்டுமே அதில் நடிப்பேன்,” எனக் கூறினார் இஷா தியோல்.

கலர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சிவாஜி பேசும்போது, 

“கடந்த 16 வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இதை தொடங்கிய சமயத்தில் திருமணத்திற்காக, தாய்மை அடைவதில் உள்ள உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக, அரசாங்க பணிகளில் சேருவதற்காக கூட, தங்களது உடல் எடை பிரச்சனையாக இருக்கிறது என அதை குறைப்பதற்கு பல பேர் எங்களை அணுகினார்கள்.. அந்தவகையில் கிட்டதட்ட, 10 லட்சம் பேர்களுக்கு எடை குறைப்பு, சருமம் மற்றும் கூந்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயிற்சி மற்றும் மருத்துவ ரீதியாக தீர்வு அளித்து வருகிறோம்.

இந்த கிரையோமேடிக் தொழில்நுட்பம் மூலமாக, திரையுலகப் பிரபலங்களான ரம்பா, பிரியாமணி, மதுபாலா உள்ளிட்ட பலர் எடை குறைப்பு செய்து, மீண்டும் திரையுலகில் தங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஈஷா தியோல் அவர்களும், எங்களது இந்த தொழில்நுட்பம் பற்றிக் கேள்விப்பட்டு எங்களை அணுகினார். தீவிர பயிற்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட 17 கிலோ வரை எடையை குறைத்துள்ளார் அதுபோல சருமம் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்காக கைலாந என்கிற பெயரில் 16 விதமான தயாரிப்புகளை உருவாக்கி உள்ளோம். இதை வெறும் அழகை பாதுகாக்கும் முயற்சியாகவோ அல்லது வியாபாரமாகவோ மட்டும் கருதாமல், சமுதாயத்திற்கு பயன்படும் ஒரு செயலாகவே மேற்கொண்டு வருகிறோம்.” எனக் கூறினார்.

More Recent News

Previous Post தி மார்க்ஸ்மேன் - இந்தியாவில் வெளியிடும் கைபா பிலிம்ஸ் news FEB-24-2021
Next Post சங்கத்தலைவன், பிரமிப்பான ஒரு படம் - சமுத்திரக்கனி news FEB-25-2021
Latest NewsView All
  • ஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-11-2021
  • ஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-10-2021
  • இன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...

    NEWS APR-09-2021
  • ஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-09-2021
  • சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு

    NEWS APR-08-2021

You May Like   

  • Karnan / கர்ணன் (2021)

  • Sulthan / சுல்தான் (2021)

  • Call Taxi / கால் டாக்ஸி (2021)

  • Manja Satta Pacha Satta / மஞ்ச சட்ட பச்ச சட்ட (2021)

  • Kaadan / காடன் (2021)

  • Roommate / ரூம்மேட் (2021)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved