அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 33வது படத்தை ஹரி இயக்கி வருகிறார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடந்து வருகிறது. 45 நடிகர்கள் நடிகைகள் நூற்றுக்கும் அதிகமான ஜுனியர் நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

ஹரி இயக்கும் படங்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிடுவார். இந்தப் படத்திலும் அருண் விஜய் அண்ணனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சமீபத்தில் பிரகாஷ்ராஜுக்கு தோள்பட்டையில் யாகம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அதனால், இப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என ஹரியிடம் தெரிவித்திருக்கிறார். அதோடு வாங்கிய அட்வான்சையும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன், அடுத்த படத்தில் மீண்டும் இணைவோம் என்று கூறியிருக்கிறார்.

அவரது வேண்டுகோளை ஏற்று தற்போது பிரகாஷ்ராஜுக்குப் பதிலாக சமுத்திரக்கனியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் ஹரி.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், யோகிபாபு, ராதிகா, KGF கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.