விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மைக்கேல்’
28 Aug 2021
'புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படம் ‘மைக்கேல்’.
ஆக்ஷன் என்டர்டெயினர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் சுந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இத் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்க இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் அடுத்து இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது
Tags: vijay sethupathi, sundeep kishan, michael, ranjith jayakodi
