மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா
15 Jun 2024
மம்முட்டி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார் சமந்தா.
தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வந்தாலும் மலையாளத்தில் சரியான கதைக்காக காத்திருந்தார். தற்போது மம்முட்டியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதனை மம்முட்டி தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பது உறுதியாகியுள்ளது.
முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. அவரிடம் படக்குழுவினர் கேட்ட தேதிகள் இல்லாத காரணத்தினால், சமந்தாவிடம் பேசி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இன்று (ஜுன் 15) முதல் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. ஜுன் 20-ம் தேதி முதலில் மம்முட்டி கலந்துக் கொள்ளவுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தினை மலையாளத்தில் மட்டுமே வெளியிடவு முடிவு செய்துள்ளார்கள்.
Tags: samantha, gautam menon, mamotty