லோகேஷ் கனகராஜை கடிந்த ரஜினி
15 Jun 2024
லோகேஷ் கனகராஜிடம் எப்போது கொடுப்பீர்கள் என்று கடிந்துக் கொண்டுள்ளார் ரஜினி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதில் ரன்வீர் சிங் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக ஃபகத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டு, தற்போது ஜூலையில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜுக்கு தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார் ரஜினி.
அப்போது, “முழுத் திரைக்கதை வடிவத்திலான கதையினை எப்போது படிக்க கொடுப்பீர்கள்?” என்று கேட்டுள்ளார் ரஜினி. அதற்கு சில நாட்களில் கொடுத்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். உடனே, இப்படி தான் 3 மாதமாக கூறி வருகிறீர்கள் என்று கடிந்துக் கொண்டுள்ளார் ரஜினி.
ஜூலை படப்பிடிப்பிற்கு இன்னும் அரங்குகள் அமைக்கும் பணி என எதுவுமே தொடங்கப்படவில்லை. அதுமட்டுமன்றி, இன்னும் முழுமையான திரைக்கதை வடிவிலான இறுதி கதையும் தயாராகவில்லை. இதனால் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் இருந்து, இறுதி வாரத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Tags: coolie, rajini, lokesh kanagaraj