‘ருத்ரன்’ படத்திற்காக ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் ரீமிக்ஸ்

19 Oct 2021

5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்து இயக்கும் படம் ‘ருத்ரன்’.

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்திற்காக 1962ம் ஆண்டு வெளிவந்த ‘வீரத்திருமகன்’ படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் ஸ்ரீதர் நடன இயக்கத்தில் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags: rudran, raghava lawrence, kathiresan, priya bhavani sankar, gv prakashkumar

Share via: