2 டி என்டெர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிக்க, த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’.

நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் அக்டோபர் 22ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யூ டியூபில் டீசர் ஒன்றரை கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் இப்படம் வெளியாக உள்ளது.