ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படம்

01 Feb 2021

'36 வயதினிலே' படம் முதல் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூரரைப் போற்று' படம் வரை வித்தியாசமான கதைகளுடன் படங்களைத் தயாரித்து வரும் நிறுவனம் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட்.

அடுத்து தங்களது 14வது தயாரிப்பாக அரிசில் மூர்த்தி இயக்கும் புதிய படத்தை ஆரம்பித்துள்ளது. 

இப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் ஆரம்பமானது. இதில் படக்குழுவினருடன்  ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன்,  தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே.ஜே. பிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்து கொண்டனர். 

இந்தப் படத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரையும் கவர்ந்த ரம்யா பாண்டியன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். 

சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிய உள்ளார். பின்னணிப் பாடகர் கிரிஷ் இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

படக்குழுவினர் விவரம்:

தயாரிப்பாளர் : சூர்யா
இணை தயாரிப்பாளர் : ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்
இயக்குநர் : அரிசில் மூர்த்தி
ஒளிப்பதிவாளர் : M. சுகுமார்
இசையமைப்பாளர் : க்ரிஷ்
படத்தொகுப்பு : சிவ சரவணன்
கலை இயக்குநர் : சி.கே.முஜிப்பூர் ரஹ்மான்
ஆடை வடிவமைப்பாளர் : வினோதினி பாண்டியன்
பாடல்கள் : யுகபாரதி, விவேக், மதன்குமார்
சண்டை வடிவமைப்பு : ராக் பிரபு
புரோடக்ஷன் கண்ட்ரோலர் : செந்தில் குமார்
மக்கள் தொடர்பு - யுவராஜ்

Tags: ramya pandian, suriya, arisil moorthy

Share via: