தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’, ஏப்ரல் வெளியீடு

01 Feb 2021

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் ‘கர்ணன்’.

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

படம் வெளியாவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கர்ணன்‘ ஏப்ரல் 202ல் தியேட்டர்களில் வெளியாகிறது. தேவையான சமயத்தில் உற்சாகமூட்டும் தேவையான ஒரு செய்தி. தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் சினிமா மற்றும் தியேட்டர்களை நம்பி வாழும் அனைவரையும் நினைத்து வெளியிடுவதற்கு,. உங்களுக்கு வேறு வழிகள் இருந்தாலும், நன்றி தாணு சார். என்னுடைய ரசிகர்கள் சார்பாக மிகப் பெரும் நன்றி. இது அவர்களுக்கு பல அர்த்தத்தைக் கொடுக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் வெளியாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை அவருடைய படம் ஓடிடியில் வெளியாவதை அவர் விரும்பவில்லை என்பதை உணர்த்துவதாக உள்ளது.

Tags: dhanush, santhosh narayanan, mari selvaraj, karnan

Share via: