’ராமாயணம்’ படத்துக்கு இசையமைக்கும் ஹாலிவுட் இசையமைப்பாளர்

08 Apr 2024

‘ராமாயணம்’ படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகிறது. இது தொடர்பான அறிவிப்பு ராமநவமி அன்று வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி, அனுமனாக பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.

தற்போது இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருமே ஆஸ்கர் விருதினை வென்றவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் வெளியான ‘க்ளேடியேட்டர்’, ‘இன்ஸ்பேக்‌ஷன்’, ‘இண்டர்ஸ்டெல்லர்’, ‘டன்க்ரிக்’, ‘ட்யூன்’ உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு ஹான்ஸ் ஸிம்மர் தான் இசையமைப்பாளர். இதில் ‘தி லையன் கிங்’ மற்றும் ‘ட்யூன்’ ஆகிய படங்களின் இசைக்காக ஆஸ்கர் விருதினை வென்றுள்ளார். மேலும் 3 முறை கோல்டன் குளோப் விருதினையும் வென்றுள்ளார்.

ஹான்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் முதல் இந்தியப் படம் ராமாயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ramayanam, ar rahman, hans zimmer, rabir kapoor, yash

Share via: