’ரஜினி 171’ படப்பிடிப்பு எப்போது? – பின்னணி தகவல்கள்
03 Apr 2024
‘ரஜினி 171’ படத்தின் பணிகள் என்ன நடைபெற்று வருகிறது என்பது தெரிய வந்துள்ளது.
‘லியோ’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக நீண்ட மாதங்களாக திரைக்கதை எழுதி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
திடீரென்று மார்ச் 28-ம் தேதி அன்று புதிய போஸ்டருடன் ஏப்ரல் 22-ம் தேதி தலைப்புடன் கூடிய டீஸர் என்று அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். இது குறித்து விசாரித்த போது, ‘ரஜினி 171’ படத்திற்கான அறிமுக டீஸர் படப்பிடிப்பு அடுத்த வாரம் தான் நடைபெறவுள்ளது.
’விக்ரம்’, ‘லியோ’ படங்கள் மாதிரி அல்லாமல், சின்ன அளவிலேயே இந்தப் படத்தின் டீஸரை படப்பிடிப்பு செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். உடனடியாக வெளியிட திட்டமிட்டு இருப்பதால் தான் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.
தற்போது கதை, திரைக்கதை என முழுமையாக முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடித்து ரஜினி சென்னை திரும்பியுடன் முழுமையான திரைக்கதையைக் கூறவுள்ளார். அதனைத் தொடர்ந்து அறிமுக டீஸர் படப்பிடிப்பு, படத்தின் படப்பிடிப்பு நாட்கள் உள்ளிட்டவை குறித்து ரஜினியுடன் விவாதிக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதில் ரஜினியுடன் நடிக்கவுள்ள நடிகர்களையும் முடிவு செய்துவிட்டார். அதை ரஜினியிடன் கூறி அவருடைய ஒப்புதலுக்குப் பிறகே ஒப்பந்தம் கையெழுத்து நடைபெறவுள்ளது. ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
ரஜினி – லோகேஷ் கனகராஜ் சந்திப்பு முடித்தவுடன், படத்திற்காக அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
Tags: rajinikanth, thalaivar 171, lokesh kanagaraj