தயாரிப்பாளர் பி.டி..செல்வகுமாரைப் பாராட்டிய தயாரிப்பாளர்கள்

17 Feb 2026

தயாரிப்பாளர், இயக்குனர், பல படங்களை வெளியிட்ட பி.டி.செல்வகுமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி வழங்கியுள்ளதை யொட்டி, அவரைப் பாராட்டி கெளரவிக்கும் விழா  நடைபெற்றது. 

இவ் விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், துணைத் தலைவர் தமிழ்க்குமரன், தயாரிப்பாளர்கள் விடியல் ராஜு, ராஜா, முருகன், சிவி குமார், எம்.எஸ். முருகராஜ்,நடிகர்கள் விஷ்ணுஹாசன், உதயா, விஜித்,  ஆகியோர் பி.டி.செல்வகுமாரை பாராட்டிப் பேசினர்.

நிகழ்வில் 10 ஏழைப் பெண்களுக்கு தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கியும், நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வம் என்பவருக்கு 50,000 நிதி உதவியும் படங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறார் பிடி.செல்வக்குமார்.

அதோடு தமிழக அரசின் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்ற தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

Tags: pt selvakumar

Share via: