பிரசன்னா, எஸ்பிபி சரண் நடிக்கம் புதிய இணைய தொடர்
18 Jan 2022
டிரன்ட் லவுட் இந்தியா டிஜிட்டல், மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் ஓபன் வின்டோ நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன.
இந்த புதிய தமிழ் இணைய தொடரை பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார்.
அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.
கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜி மோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ், வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
Tags: prasanna, spb charan, dhanya, kaniha, balaji mohan, trend loud