பவர் பேட்டா - முன்னோட்ட வீடியோ வெளியீடு

09 May 2026

விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘பவர் பேட்டா’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது.

இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.

சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது  திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட்  அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ்  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ்  காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின்  திறனை வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால  உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.

படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Tags: power petta

Share via: