போலீஸ் போலீஸ் - ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் தொடர்

01 Sep 2025

‘போலீஸ் போலீஸ்’, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப்தொடராக உருவாகி, வரும் செப்டம்பர் 19 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் புரோமோவில் ரசிகர்களை கவர்ந்த மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் தோன்றினர். 

புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான், நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகாவாக அறிமுகமாகிறார்.

இந்த கலகலப்பான புரோமோவில், லலிதாம்பிகா முரளியை தவறுதலாக திருடன் என நினைத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், முரளி தனக்கு போலியான காயத்தை உருவாக்கி, லலிதாவை கிண்டல் செய்கிறார். இதில் செந்திலும் இணைய, இந்தத் தொடர் ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஒரு பொழுதுபோக்கு அனுபவத்தை உறுதியளிக்கிறது.

இத்தொடரில் மிர்ச்சி செந்தில், சுஜிதா தனுஷ், ஜெயசீலன் தங்கவேல், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்செண்ட் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஆஃபிஸ்’ மற்றும் ‘ஹார்ட்பீட் சீசன் 2’ போன்ற ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடர்கள் பார்வையாளர்களை ஈர்த்து வரும் நிலையில், ‘போலீஸ் போலீஸ்’ செப்டம்பர் 19 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகி, ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது.

Tags: police police

Share via: