தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘பாக்கெட் நாவல்’

18 Feb 2026

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் முதல் பார்வை, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். 

‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். ‘கொலைகாரன்’,  ‘வதந்தி’ வெப் சீரிஸ் முதலான படைப்புகளை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். 

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா இணைந்திருப்பது படத்தின் இன்னொரு பெரிய பலமாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்கிறார். வே.சண்முகராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை உரிமையை முன்னணி இசை நிறுவனமான தின்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது. அதேபோல், படத்தின் டிஜிட்டல் உரிமைகளுக்காக முன்னணி ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது படத்தின் வணிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக் கட்டத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில் நுட்பக் குழு

தயாரிப்பு - தியாகராஜன் குமாரராஜா, S.D. எழில்மதி (Tyler Durden And Kino Fist (TDKF)

இயக்கம் - தியாகராஜன் குமாரராஜா

இசை - இசைஞானி இளையராஜா

கதை, திரைக்கதை - ஆண்ட்ரூ லூயிஸ்

ஒளிப்பதிவு - நீரவ் ஷா

எடிட்டிங்  - சத்யராஜ் நடராஜன்

கலை இயக்கம் - வே.சண்முகராஜா

உடை வடிவமைப்பு - S.D. எழில்மதி

பாடல்கள் - யுகபாரதி

பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா

ஸ்டில்ஸ்  – C. H. பாலு

கலரிஸ்ட் – G. பாலாஜி

ஒலி வடிவமைப்பு  – தபஸ் நாயக்

SFX - அருண் சீனு

VFX supervisor: அரவிந்த் நாகா

தயாரிப்பு மேற்பார்வையாளர் – அருண் அருணாசலம்

நிர்வாக தயாரிப்பாளர் (Executive Producer) – சத்யராஜ் நடராஜன்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

Tags: pocket novel, thiagarajan kumararaja, vijay sethupathi, malavika mohanan

Share via: