நவம்பர் 14ல் இருந்து தள்ளிச் செல்கிறது ஃபீனிக்ஸ்

12 Nov 2024

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’. இப்படமானது, முன்னதாக நவம்பர் 14,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்று படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தங்களது தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் தங்களது பொறுமைக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ திரைப்படம் முன்னெப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இருக்கும்.” என்று கூறியுள்ளனர்.

சென்சார் போர்டில் படத்திற்கு நிறைய கட் சொல்லியிருப்பதால், படக்குழு வெளியீட்டு தேதியை தள்ளி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Tags: phoenix, suriya vijay sethupathi, release date,

Share via: